Primary tabs
இந்தப் பாடம் ஐம்பெருங் காப்பிய வரிசையில் குறிப்பிடப்படும் குண்டலகேசி - வளையாபதி பற்றிப் பேசுகிறது. இவை இரண்டும் முழுமையாக் கிடைக்கப் பெறாத காப்பியங்கள். இவை இரண்டும் வேறு வேறு சமயச் சார்புடையன. குண்டலகேசி பௌத்த சமயச் சார்புடையது. வளையாபதி சமண சமயச் சார்புடையது. இவற்றின் கதையும் சரியாக அறியப்படவில்லை. இவை பற்றிய செய்திகளை இப்பாடம் கூறுகிறது.