தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2-தொகுப்புரை

2.6 தொகுப்புரை

நண்பர்களே ! இதுவரை பெரியபுராண இலக்கியச் சுவை பற்றிய சில
செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன
செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை
நினைவு படுத்திப் பாருங்கள்:

  • பெரியபுராண இலக்கியச் சுவை பற்றிப் பொதுவாக அறிந்து கொள்ள
    முடிந்தது.

  • இலக்கிய நயங்களாகக் கருதப்படும் கற்பனை, சொல்லாட்சி,
    அணிநலன்கள் ஆகியன பற்றிப் புரிந்து கொள்ள முடிந்தது. இவை
    பெரியபுராணத்தில் எவ்வாறு அமைந்து கிடக்கின்றன என்பதைப்
    பாடல்கள் வழி அறிந்து கொள்ள முடிந்தது.

  • 63 நாயன்மார்களில் ஒருவரான மெய்ப்பொருள் நாயனார்
    வரலாற்றை முழுவதும் படித்து இருப்பீர்கள்.

1.

மெய்ப்பொருள் நாயனார் எந்த ஊரைச் சேர்ந்தவர்?

2.

நாயனார் எதனை மெய்ப்பொருள் என நம்பினார்?

3.

நாயனாரின் பகைவன் யார்?

4.

நாயனார் “தத்தா நமர்” என்று கூறிய நிகழ்ச்சியை விவரிக்க.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 02:01:53(இந்திய நேரம்)