Primary tabs
4. நாயனார் “தத்தா நமர்” என்று கூறிய நிகழ்ச்சியை
விவரிக்க.
சிவனடியார் வேடத்தோடு வந்த முத்தநாதன் உள்ளே
நுழைந்த
போதே அவனைத் தத்தன் கவனித்து வந்தான்.
முத்தநாதன்
செய்த செயலைக் கண்டு நொடிப்
பொழுதில்
அரசனை
அணுகினான்;
அங்கிருந்த முத்தநாதனை
வாளினால் கொல்லப்
போனான். அப்பொழுது குருதி
கொப்புளிக்க வீழ்ந்து
கொண்டிருந்த
நாயனார்
“தத்தனே இவர் நம்மவர்;
சிவனடியார்” என்று தடுத்துச்
சாய்ந்தார்.