தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடம் 1-A05131 : பல்லவர் காலத் தமிழ் - எழுத்தியல்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் பல்லவர் காலத் தமிழ் எழுத்துகளில்
ஏற்பட்ட மாற்றங்களைக் கூறுகிறது. சங்க காலத்திலும், சங்கம்
மருவிய காலத்திலும் தமிழ் எழுத்துகளின் வரிவடிவங்களில்
மாற்றங்கள் ஏற்பட்டன. அவை போன்றே பரிணாம
வளர்ச்சியால் பல்லவர் கால எழுத்தியலிலும் பல மாற்றங்கள்
ஏற்பட்டுள்ளன. அத்தகைய மாற்றங்களை விளக்கிக்
கூறுவதாக இப்பாடம் அமைந்துள்ளது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இதனைப் படித்து முடிக்கும் போது நீங்கள்
கீழ்க்காணும் கருத்துகளை அறிந்து கொள்வீர்கள்.

பல்லவர் காலத்தில் எழுந்த இலக்கிய, இலக்கண நூல்கள்
பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளலாம்.
அக்காலக் கட்டத்தில் தமிழ் மொழியில் தோன்றிய ஒலி
மாற்றங்களால் பாதிக்கப்பட்ட உயிர் எழுத்து அடைந்த
மாற்றங்களைச் சான்றுகளுடன் உணர்ந்து கொள்ள
இயலும்.
தமிழ்மொழி வடமொழியால் பாதிக்கப்பட்டு விட்டதால்
தமிழ் மெய்யெழுத்துகள் பல்லவர் காலத்தில் அடைந்த
மாற்றங்களையும், தனி ஆய்தத்தின் தோற்றத்தையும்
அறிந்து கொள்ளலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 05:03:39(இந்திய நேரம்)