தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.8 தொகுப்புரை

6.8 தொகுப்புரை

நாடகம் பலவகைகளில் அதன் கூறுகளை வெளிப்படுத்துகிறது.
நடத்திக் காட்டப்படும் கலையாக நாடகம் அமைவதும் இதற்கான
முக்கியக் காரணமாகும் நாடகப் படைப்பு, நாடகப் பண்பு, நாடக
முடிவு, நாடகச்சுவை, நாடகக்கதை, நாடக அளவு போன்ற பல
கூறுகள் நாடகத்துள் ஆளுமை செலுத்துகின்றன. இந்நிலைப்பாடு
நாடக வகைக்கும், வளர்ச்சிக்கும் காரணமாக அமைகிறது. தமிழ்
நாடகத்தின் பன்முக வளர்ச்சியே, தனித்தனி நாடக வகைக்கும்,
அதன்வழி உருவாக்கம் பெறும் நாடகக் கூறுகளுக்கும், தமிழ்
நாடக இலக்கிய வளர்ச்சிக்கும் உந்துதலாக அமைந்துள்ளது
என்பதையே நாடகவகை வரலாறு நமக்குப் புலப்படுத்துகிறது.


1.
நகைச்சுவை நாடகம் என்று எதைக் கருதலாம்?
2.
தமிழில் குறிப்பிடத்தக்க எள்ளல் நாடக வகையிலமைந்த
நாடகங்கள் இரண்டின் பெயர்களைத் தருக.
3.
அங்கத நாடகத்தின் சிறப்பு யாது?
4.
கதையமைப்பு நிலையில் தமிழ் நாடகங்கள் எவ்வாறு
வகைப்படுத்தப்படுகின்றன?
5.
சமூக நாடகங்கள் வெளிப்படுத்தும் முக்கியமான
கருத்துகள் யாவை?
6.
வரலாற்று நாடகங்கள் மூன்றின் பெயர்களைக் குறிப்பிடுக.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 05:56:19(இந்திய நேரம்)