Primary tabs
தண்டியலங்காரம் பொருளணியியலில் விளக்கிக் கூறப்படும்அணிகள் முப்பத்தைந்து. இவற்றில் முதற்கண் கூறப்படும் தன்மைஅணி, உவமை அணி, உருவக அணி, தீவக அணி ஆகிய நான்கும் இப்பாடத்தில் விளக்கப்படுகின்றன. ஒவ்வோர்அணியைப் பற்றியும் தண்டியாசிரியர் கூறும் போது முதற்கண்அதன் இலக்கணத்தைக் கூறுகிறார். அவ்வணியானதுபல்வகைப்பட்டு அமையுமாயின் அவ்வகைகளையும் கூறுகிறார்.தண்டியலங்கார உரையில் ஒவ்வொரு வகைக்கும் தெளிவானவிளக்கம் தரப்படுகிறது; ஒவ்வொரு வகைக்கும் பொருத்தமான பாடல் சான்று காட்டப்படுகிறது; அப்பாடலுக்குப் பொருள் தரப்படுகின்றது; அணிப் பொருத்தம் ஆங்காங்கே சுட்டிக் கூறப்படுகிறது. இந்நெறி முறையில் இப்பாடத்தில் ஒவ்வோர்அணியையும் பற்றிய கருத்துகள் இடம் பெறுகின்றன.