Primary tabs
D06142 நாட்டுப்புற ஆடல்கள்
மனிதனின் மகிழ்ச்சி வெளிப்பாடு ஆடற்கலையாகும். துள்ளி விளையாடிய ஆடற்கலை மண்ணின் மணம் கமழும் நாட்டுப்புறக் கலையாக உருவெடுத்தது. இலக்கண வரம்பிற்குட்படுத்தப்பட்ட பொழுது செவ்வியல் கலையாயிற்று என்ற நிலைகளை இந்தப் பாடம் உணர்த்துகிறது.
நாட்டுப்புற ஆடல்கள் இறை வழிபாட்டுக் கலையாகத் தோன்றி, பின்பு மகிழ்வுறு கலையாக வளர்ந்த நிலைகளைத் தெளிவுபடுத்துகிறது.
நாட்டுப்புறம் தந்த ஆடல் வகைகள் இன்றும் நாட்டுப்புற மக்களால் போற்றப்பட்டு வருவதனை இந்தப் பாடம் விளக்குகிறது.
-
நமது தொன்மையான கலைவடிவமான ஆடற்கலை பற்றி உணரலாம்.
-
ஆடற்கலைக்கும் நாட்டுப்புறக் கலையே அடிப்படையாக அமைந்துள்ளது என்பதனைப் புரிந்து கொள்ளலாம்.
-
இறைநெறியோடு தொடங்கிய இக்கலைகள் இறைநெறி வளர்ப்பனவாகவும், மகிழ்வுறு கலையாகவும் வளர்ந்துள்ள பாங்கினை அறியலாம்.
-
பொதுமக்களின் கலை வெளிப்பாடான நாட்டுப்புறக் கலை வடிவங்கள் இன்றும் வாழ்ந்து வருவதனைக் கண்டு மகிழ்வு கொள்ளலாம்.