தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P10123 - அண்ணாவின் சிறுகதைகள்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் பல துறைகளிலும் வல்லவராகிய அறிஞர்
அண்ணாவின் சிறுகதைகளின் பல்வேறு சிறப்பியல்புகளை
விளக்கிக் காட்டுகிறது. 1934 முதல் 1966 வரையுள்ள காலத்தில்
அண்ணாவின் சமூகச்     சிந்தனையோட்டம்     அவரது
புனைகதைகளில் எவ்வாறு பதிவாகியுள்ளது என்பதைக்
காட்டுகிறது. சாதி, மத,    பொருளாதார,     பால்
வேறுபாடுகளால் ஒடுக்கப்படும் மக்களின் உயர்வுக்காகவே
அண்ணா     எழுதினார்     என்பதைப் புலப்படுத்துகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்
பெறலாம்?
அரசியலில் புகழ் பெற்றிருந்தது போலவே அறிஞர் அண்ணா
இலக்கியத் துறையிலும் சிறந்து விளங்கினார் என்பதைப்
புரிந்து கொள்ளலாம்.
பெரியாரின் வழிவந்த அண்ணாவின் சமூக, பொருளாதாரக்
கொள்கைகளின் புரட்சிகரமான எண்ணங்கள் எவ்வாறு
கலையுருவம் கொண்டிருக்கின்றன என்பதைக் கண்டு
கொள்ளலாம்.
வரலாற்றுக் கதைகள் எழுதும்போது கூட வஞ்சகமும்
பொய்மையும் ஏமாற்றும் காரணமாக மனித சமூகத்துக்கு
நேரும் அழிவுகளை அண்ணா படம் பிடித்துக் காட்டுவதை
விளங்கிக் கொள்ளலாம்.
கருத்துகளில் மட்டுமல்லாமல் கதை சொல்லும் உத்திகளிலும்,
நடைச் சிறப்பிலும், கதை அமைப்பிலும் அண்ணா சிறந்து
விளங்குகிறார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 18:21:29(இந்திய நேரம்)