Primary tabs
மக்களிடையே இயற்கையாகப் பரவிக் கிடக்கும் மகிழ்வுணர்ச்சி
பல அழகுக் கலைகளுக்குத் தோற்றுவாயாக அமைந்தது. குறிப்பாக
மக்களிடம் மிகுந்து காணப்படும் விளையாட்டு உணர்ச்சியும்,
போலச் செய்தல் உணர்ச்சியும் நாடகக் கலையின் மூலங்கள்
ஆகும். விளையாட்டுணர்ச்சி நடனத்தை வளர்த்தது. போலச்
செய்தல் நாடகத்தை வளர்த்தது.