Primary tabs
பெண் ஆண் பேதம் முற்றிலும் மறுக்கத்தக்கது.பெண்களுக்கு
ஆண்கள் இழைக்கும் கொடுமைகளை வெளிச்சமிட்டுக்
காட்டியவர் பாரதியார். மனித சமூகம் மீட்சிபெறப் பெண்
விடுதலை அவசியம் எனப் பாடியவர் அவர். “தனி மனித
சுதந்திரத்திற்கும், சுதந்திரமின்மைக்கும் உள்ள உறவு
மனிதனுக்கும், புற உலகத்திற்கும் உள்ள உறவில்தான்
அமைந்திருக்கிறது” என்ற மார்க்சின் கருத்துகளை உள்வாங்கிய
பாரதியார், எதையும் பற்றாமல் பணிபுரிவதும், பிறருக்கு
ஆணையிடாமல் முன் நடத்த உதவுவதும் பெண்நிலை
இயங்கலுக்கான எடுத்துக்காட்டாகக் கொண்டு, ஆண்
பெண்ணிற்கு உடை, இடம், பாதுகாப்புத் தருவதால் அவன்
பெண்ணைத் தன் உடைமை என எண்ணத் தோன்றியதை
விளக்குகிறார். அதனை ஆராயும்போது பெண்ணினம்
வீழ்ச்சியுற்றமையை உணர்கிறான். இதனை எண்ணிப்
பார்க்கும் கவிஞன் இந்த வீழ்ச்சி நியாயமற்றது; எதிர்க்க
வேண்டியது எனத் தீப்பிழம்பாகிறான்.
பெண்ணிற்கு விடுதலை நீர் இல்லை என்றால்
பின்னிந்த உலகினிலே வாழ்க்கையில்லை (சுயசரிதை,45)
எனத் தீர்மானிக்கிறான். இந்தப் பின்னணியில்தான் பாரதியார்
பெண்கள் விடுதலைக் கும்மியைப் பாடியுள்ளார்.