Primary tabs
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் தேசியச்
சிந்தனையாளர்; காந்தியக் கொள்கையாளர்; ஓவியப்
புலமையாளர்; தமிழ் உணர்வாளர்; நாட்டுப்பற்றாளர்; சமூகச்
சிந்தனையாளர் தீண்டாமையை எதிர்த்தவர்; கள்ளுண்ணுதலைக்
கடிந்தவர் ; தமிழன் என்ற தனித்தன்மையை கவிதைகள் வழி
ஊட்டியவர் ; அண்ணல் காந்தியடிகளின் அகிம்சைக்
கொள்கை நாடுதோறும் பரவிடக் கவிதைகள் இயற்றியவர்;
பெண்ணின் பெருமை பேசியவர்; வறுமை நீங்கக் கவிதை
வடித்தவர் .