தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.5 பட்டுக்கோட்டையார் பாடலில் இலக்கிய நயம்

6.5 பட்டுக்கோட்டையார் பாடலில் இலக்கிய நயம்

சின்னஞ்சிறு கண்மலர் செம்பவள வாய்மலர்
சிந்திடும் மலரே ஆராரோ
வண்ணத் தமிழ்ச் சோலையே! மாணிக்கமாலையே
ஆரிரோ... அன்பே... ஆராரோ...

    (கே.
பாதி ( தொ.ஆ ), பட்டுக்கோட்டையார்
    பாடல்கள், ப.158)


என்ற தாலாட்டுப் பாடல் எத்தனை இலக்கியத் தரம் வாய்ந்ததாக
உள்ளது!

உவமைக்குச் சிறந்த பாடல்களைப் பட்டுக்கோட்டையாரிடம்
காணலாம்.

உழவனும் ஓயாத உழைப்பும்போல் நாமே
ஒன்றுபட்டு வாழ்க்கையில் என்றுமிருப்போம்

(பட்டுக்கோட்டையார் பாடல்கள் - ஒரு திறனாய்வு,
பக்.135)


இங்கே காதலைச் சொல்லுமிடத்தும் தம் தனிப்பட்ட சமூகக்
கருத்தோட்டத்தை உவமையாகப் படைத்திருப்பது சிறப்பிற்குரியது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 20:13:17(இந்திய நேரம்)