தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - I

6.

நார்வே நாட்டு நாடக ஆசிரியருள் ஒருவரைக்
குறிப்பிடுக? தமிழில் வந்துள்ள அவர் நாடகங்களைக்
குறிப்பிடுக.

    நார்வே நாட்டு இப்சனின் நாடகங்கள், தமிழில் பல
வடிவங்களில் நூலாக்கப்பட்டுள்ளன. தி பில்லர்ஸ் ஆப்
சொசைட்டி (The Pillars of Society). ஆன் எனிமி ஆப்
த பீப்பிள் (An Enemy of the people) என்ற நாடகங்கள்
இரண்டையும் சமூகத்தின் தூண்கள், மக்களின் பகைவன்
என்ற பெயர்களில் கா.திரவியம் மொழிபெயர்த்துள்ளார்.

    கோபுரத்தின்     உச்சியிலே,     தோல்வியின்
சந்நிதானத்திலே என்ற இரு நாடகங்களையும் கா.திரவியம்
மொழிபெயர்த்துள்ளார். பேய்கள் (Ghosts) , காட்டு வாத்து
(The Wild Duck) என்னும் நாடகங்களை துரை.அரங்கசாமி
என்பவர்     மொழிபெயர்த்துள்ளார்.     பொம்மையா?
மனைவியா? (The Doll’s house) என்னும் நாடகத்தை,
க.நா.சுப்பிரமணியன் தமிழாக்கம் செய்துள்ளார்.

    அறிஞர் அண்ணாவின் நாடகங்களில் சில, இப்சனின்
நாடகங்கள் சிலவற்றைத் தழுவியனவாக அமைந்துள்ளன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:46:34(இந்திய நேரம்)