Primary tabs
ஒரு கட்டடத்தை உருவாக்க பல்வேறு மூலப்பொருள்கள்
தேவைப்படும். அவற்றை ஒவ்வொன்றாக
எடுத்துப்
பொருத்தமுறச் சேர்ப்பதன் மூலம் அக்கட்டடம் உருவாகிறது.
அதுபோல ஒரு நாவலை உருவாக்கப் பல்வேறு இலக்கியக்
கூறுகள் தேவை. அவற்றை ஒழுங்குபடுத்திச் சரியாக
அமைப்பதன் மூலம் நாவல் உருவாகும். கதை, கதைப்பின்னல்,
பாத்திரப்படைப்பு, பாத்திர வகைகள், கதை நிகழும் இடம்,
கதை நிகழும் காலம், உரையாடல் போன்றவை நாவலை
உருவாக்குகின்றன.