தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • பாடம் - 3

    D02123 கரந்தைத் திணை

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?



        திணைப் பூவைச் சூடுவது, தம்மைப் பிற மறவரிடமிருந்து
    வேறுபடுத்திக் காட்டவே என்பதை விளக்குகிறது.

        கரந்தை என்பது கரந்தைப் பூவைக் குறிப்பதோடு, நிரை
    மீட்சி எனும் ஒழுக்கத்தையும் அறிவிக்கும் குறியீட்டுச் சொல்
    என்பதை விளக்கிக் காட்டுகிறது. வெட்சி
    நிரை கவர்வது; கரந்தை
    நிரை மீட்பதாகும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. கரந்தைத்
    திணையையும் அதன் துறைகள் பதின்மூன்றனையும் விளக்குகிறது.

        துறைப் பெயர்க்காரணம் - துறைப் பொருத்தம்
    ஆகியவற்றைப் பேசுகின்றது. கவர்ந்த ஆநிரையை மீட்பது, பகை
    மன்னனுடன் போரிடுவதற்கான காலமும் களனும் குறித்துக்
    கொள்வதற்கே என்பதையும், மீட்கும் முயற்சியில் கரந்தை மறவர்
    எய்தும் இழப்புகளும் உண்டு என்பவற்றையும் இயம்புகின்றது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?



    • கரந்தை மன்னன் வெட்சியார் கைப்பற்றிய ஆநிரைகளை
      மீட்டல் வேண்டும். இதுவே அரசியல் அறம் என அறியலாம்.


    • மறவர்களின் வீரம், அவர்களது வீரமொழி, மீட்சிப் போரின் நிகழ்வுகள் முதலியவற்றை அறிந்து மகிழலாம்.

    • முதல் ஊழிக்குப் பின் மலை நிலம் தோன்றியது; இதனைச்
      சார்ந்து முல்லை, மருதம் ஆகிய நிலங்கள் உருக்கொண்டன;
      முன்னர்த் தோன்றியது மலைவாணர்குடி என்பதை
      அறியலாம்.

    • போர்க்களத்தில் வீழ்ந்தாரிடம் மற்றவர்கள் காட்டும்
      உணர்வும் வருத்தமும் அறிந்து இரக்கம் கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:39:42(இந்திய நேரம்)