Primary tabs
-
பாடம் - 1
D02121 புறப்பொருள் இலக்கணம் - பொது அறிமுகம்
தமிழில் அகம், புறம் என வழங்கும் இரண்டு திணைகளைப்
பற்றிப் பேசுகிறது. தொல்காப்பியரின் கருத்துக்களுக்கும்
புறப்பொருள் வெண்பாமாலைக்கும் உள்ள தொடர்புகளைக்
குறிப்பிடுகிறது.
தமிழரின் போர் அறம் பற்றிக் கூறுகிறது.
புறப்பொருள் வெண்பாமாலை கூறும் திணைகள்,
நூலாசிரியர் பற்றிய குறிப்புகள் முதலியவற்றை எடுத்துச்
சொல்கிறது.இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- தமிழ்
இலக்கண வளர்ச்சியைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
- புறப்பொருள்
வெண்பாமாலையின் தனித்தன்மையை
அறிந்து வியப்படையலாம். - புறப்பொருள்
வெண்பாமாலை கூறும் திணை அமைப்பைத்
தெரிந்து கொள்ளலாம். - திணைகளுக்கிடையே
உள்ள தொடர்புகளை
அறிந்து
மகிழலாம். - திணைகளுக்குரிய
துறைகளின் கருத்தைச் சுருக்கமாகவும் தெளிவாகவும்
‘கொளு’ என்னும் பகுதி
விளக்குவதை
அறிந்து இன்புறலாம்.
- தமிழ்
இலக்கண வளர்ச்சியைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.