Primary tabs
தன் மதிப்பீடு - I : விடைகள்
ஒழிபியல் விளக்கம் - தருக.
நாற்கவிராச நம்பி இயற்றிய நம்பியகப்
பொருள்
என்னும் இலக்கண நூலின் இறுதி இயல் ‘ஒழிபியல்’
ஆகும். அது முன்னர் அமைந்த அகத்தினை
இயல்,
களவியல், கற்பியல், வரைவியல்
என்னும் நான்கு
இயல்களிலும் சொல்லப்படாமல்
விட்டுப்போன
செய்திகளைக் கூறுவதாக
அமைந்துள்ளது.
‘சொல்லாது ஒழிந்த’ செய்திகளைச்
சொல்லும்
இயல் என்னும் அடிப்படையில் ‘ஒழிபியல்’
என்னும்
பெயர் அமைந்தது.