Primary tabs
தன் மதிப்பீடு -
I : விடைகள்
அகமே தமிழ் என்பதற்குச் சான்று தருக.
இறையனார் அகப்பொருள் உரையில்
‘இந்நூல் தமிழ்
நுதலிற்று’ என்று
குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறே
அகப்பொருள் இலக்கண நூல்
ஒன்றுக்குத் தமிழ் நெறி
விளக்கம் என்றே பெயர் அமைந்துள்ளது.
அறுவகை
இலக்கணம் என்னும் நூலின் ஆசிரியர் புனிதத் தமிழனுக்கு
ஆவியாவது அகப்பொருள்
என்று கூறியுள்ளார்.
இவையாவும் ‘அகமே தமிழ்’ என்பதைப் புலப்படுத்துவன.