தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

தொகுப்புரை

  • 1.10 தொகுப்புரை

    பல்லவர்கள் தமிழகக் கலை வரலாற்றின் தொடக்கக் காலத்தவராக இருப்பினும் தமக்கென்றே ஒரு தனி மரபைத் தோற்றுவித்துச் சென்றுள்ளனர். தமிழகத்தில் பல்லவர்களுக்கு அடுத்தடுத்துத் தோன்றிய அரச மரபினர், பல்லவரது கோயில் கட்டடக் கலை, சிற்பக் கலை ஆகியவற்றில் சிற்சில மாற்றங்கள் செய்து தத்தமது கலை மரபைப் போற்றினர். எனவே பல்லவர்களே தமிழகக் கலை வரலாற்றுக்கு வித்திட்டவர்கள் எனலாம்.

    சிற்பக் கலையில் சோழர்களது காலம் பொற்காலம் என்று கூறும் அளவிற்குக் கோயில்களில் கல்லினாலான சிற்பங்களை அழகுற அமைத்துப் போற்றி வந்துள்ளனர் சோழ மன்னர்கள். இன்றும் அவற்றுள் பெரும்பாலானவை காணக் கிடைக்கின்றன.

    1.
    மிகப் பெரிய விமானங்களைக் கொண்ட கோயில்கள் எவை?
    2.
    தஞ்சைப் பெரிய கோயிலுக்கு இராசராசன் இட்ட பெயர் என்ன?
    3.
    சோழர் சிற்பங்களின் பொதுத் தன்மைகள் சிலவற்றைக் கூறுக.
    4.
    கண்டச் சிற்பங்கள் பற்றி எழுதுக.
    5.
    கங்கை கொண்ட சோழபுரம் சண்டேச அனுக்கிரக மூர்த்தி சிற்பத்தின் முக்கியத்துவம் என்ன?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 00:16:52(இந்திய நேரம்)