Primary tabs
-
தன்மதிப்பீடு : விடைகள் - I
(4)கண்டச் சிற்பங்கள் பற்றி எழுதுக.விமானத்தின் அதிட்டான உறுப்புகளில் ஒன்றான கண்டத்தில் இடம்பெறும் சிற்பங்களுக்குக் கண்டச் சிற்பங்கள் என்றுபெயர். இவை புடைப்புச் சிற்பங்களாக இருப்பதோடு மட்டுமின்றி 1/2 x 1/2 அடி என்னும் அளவில் சிறிய சிற்பங்களாக அமைந்திருக்கும். இவை பெரும்பாலும் இராமாயணம், சிவ புராணம், பெரிய புராணம், கிருஷ்ண லீலை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அமையும். கும்பகோணத்தில் உள்ள நாகேசுவரர் கோயில் கண்டச் சிற்பங்கள் இராமாயணக் கண்டச் சிற்பங்களுக்குச் சிறந்த எடுத்துக் காட்டு ஆகும்.