Primary tabs
-
தன்மதிப்பீடு : விடைகள் - I
(5)கட்டட வகைச் சிற்பங்கள் என்றால் என்ன?பெரிய பாறையில் ஒரு முழுக் கட்டடமே செதுக்கி வடிவமைக்கப்படுவது கட்டடச் சிற்பம் ஆகும். மகாபலிபுரத்திலுள்ள ஒற்றைக் கல் இரதங்கள் கட்டட வகைச் சிற்பங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரதங்கள் மேலிருந்து கீழாகச் சிற்பங்களைச் செதுக்குவது போல் தேவையற்ற பகுதிகளை நீக்கி அமைக்கப்பட்டவை. கோயில் அமைப்பே என்றாலும் செதுக்கப்படும் முறையால் இவை சிற்பங்களாகவும் கருதப்படுகின்றன.