Primary tabs
களிறுவளர் பெருங்கா டாயினும்
ஒளிபெரிது சிறந்தன்று அளவென் நெஞ்சே.
ஆதியில் தமிழ்நூல் அகத்தியர்க் குணர்த்திய
மாதொரு பாகனை வழுத்துதும்
போதமெய்ஞ் ஞான நலம்பெறற் பொருட்டே.
தவளத் தாமரைத் தாதார் கோயில்
அவளைப் போற்றுதும் அருந்தமிழ் குறித்தே.
சந்தனப் பொதியத் தடவரைச் செந்தமிந்ப்
பரமா சாரியன் பதங்கள்
சிரமேற் கொள்ளுந் திகழ்தரற் பொருட்டே.