Primary tabs
னொருவனை மற்றொருவன் கண்டவழி, இவன் வள்ளெயிற்றரிமா முதலாயின கண்டு அஞ்சினானென்றறிவதல்லது வள்ளெயிற்றரிமாவினைத் தான் காண்டல்வேண்டுவதன்று. தான் கண்டானாயின் அதுவுஞ் சுவையெனவேபடும். ஆகவே, அஞ்சினானைக் கண்டு நகுதலும் கருணைசெய்தலும் கண்டோர்க்குப் பிறப்பதன்றி அச்சம் பிறவாதாகலான் உய்ப்போன் செய்தது காண்போனுய்த்த அறிவின்பெற்றியாற் செல்லாதாகலின், இருவகை நிலமெனப்படுவன சுவைப்பொருளும் சுவைத்தோனுமென இரு நிலத்தும் நிகழுமென்பதே பொருளாகல்வேண்டுமென்பது.” கண்டோர்க்குச் சுவை பிறவாதென்று பேராசிரியர் மறுத்துக் கூறிய அதனால் கண்டோர்க்கும் சுவை பிறக்குமென்று கூத்த நூலாருட் சிலர் கூறுவரென்பது பெறப்படும்.
குறிப்பாவது : பொறியுணர்வு மனத்துப்பட்டவழி உள்ளத்து நிகழுஞ் சுவைக்குறிப்பு.
சத்துவமாவது : அவ்வுள்ளநிகழ்ச்சி பிறந்தவழி உடம்பின் கண் தாமே தோன்றும் வேறுபாடு. அவையாவன: மெய்ம்மயிர் சிலிர்த்தல், கண்ணீர்வார்தல், நடுங்கல், வியர்த்தல், தேற்றம், களித்தல், விழித்தல், வெதும்பல், சாக்காடு, குரற்சிதைவு என்னும் பத்துமாம். இளம்பூரணர்க்கும் இதுவே கருத்தென்பது, “பேயானும் புலியானும் கண்டானொருவன் அஞ்சியவழி (அவன் கண்) மயக்கமும் கரப்பும் நடுக்கமும் வியர்ப்பு முளவாமன்றே, அவற்றின் அச்சத்திற்கேதுவாகிய புலியும் பேயும் சுவைக்கப்படுபொருள். அவற்றைக்கண்ட காலந்தொட்டு நீங்காது நின்ற அச்சம் சுவை. அதன்கண் மயக்கமும் கரத்தலும் அச்சக்குறிப்பு. நடுக்கமும் வியர்ப்பும் சத்துவம். இவற்றுள் நடுக்கமும் வியர்ப்பும் பிறர்க்கும் புலனாவன என்று கொள்க. ஏனைய மனநிகழ்ச்சி. பிறவுமன்ன. இவற்றின் விரிவை நாடகநூலிற் காண்க.” என்று கூறுதலான் அறியப்படும்.
இங்ஙனம் பேராசிரியரும் இளம்பூரணரும் மனத்து நிகழ்வன சுவையும் குறிப்பும் என்றும், அச்சுவை உடம்பின் வழியாகப் பிறர்க்குப் புலனாவது சத்துவம் என்றும் கூறுதலானே, சுவையும் குறிப்பும் அகத்து நிகழும் மெய்ப்பாடுகள் என்பதும், சத்துவம் புறத்து நிகழும் மெய்ப்பாடு என்பதும் பெறப்படும். இதுபற்றியே,