Primary tabs
இதன்கண், சீதையினழகைக்கண்டு சூர்ப்பநகைக்கு உண்டான ஆச்சரியம் -- ஸ்தாயிபாவம். சீதையினழகு -- பொருள் (ஆலம்பநவிபாவம்). அழகின் மிகுதி--உத்தீபநவிபாவம். அழகின் மயங்கலும், அதனைப் பலமுறை நோக்கலும், வியப்புரையும்--குறிப்பு (அநுபாவம்). பெண்பிறந்தேனுக்கென்றமை யானே பெண்களைக்கண்டு பெண்களுக்குக் காதலுண்டாகாமையாகிய பெண்டன்மை பெறப்படலின் அது தன்மையென்னும் துணைமெய்ப்பாட்டுளடங்கும். என்படும் பிறருக்கென்பதுமது. என்னை? ஆண்டன்மை பெறப்படலின். மயங்கிநிற்றல், களிப்பு முதலியன--விறல் (சாத்துவிகபாவம்). அழகின் புதுமைபற்றி உண்டான வியப்பு--சுவை (இரசம்) ஆகும்.
அச்சம்
கைத்தல மொன்று நீண்ட காய்ப்புடை வெரிநிற் போட்ட
பைத்தலை பிடிப்ப வொன்று புகாத்தலைப் பாகு பற்ற
மொய்த்தலை வெய்திப் பின்முன் பார்த்திடு முகத்த ராகி
யெய்த்தலி னிருதாள் சோர வேகுவார் வணிக ரெல்லாம்.
இதன்கண், யாற்றினெழுந்த யானையைக்கண்டு வணிகருக்குண்டான பயம்--ஸ்தாயிபாவம். யானை--பொருள் (ஆலம்பந விபாவம்). அதன் பெருமையும், வருகையும், தம்மைக் கொல்லும் என்ற நினைவும் தடுப்பாரின்மையும் -- உத்தீபநவிபாவம். அடிக்கடி பின்பக்க நோக்கலும், ஓடலும்--குறிப்பு (அநுபாவம்). பயத்தாலுண்டான நடுக்கம், வியர்வை முதலியன--விறல் (சாத்துவிகபாவம்). வெரூஉதல், இடுக்கண் முதலியன--துணைமெய்ப்பாடு (சஞ்சாரிபாவம்). களிற்றாலுண்டான அச்சம்--சுவை (இரசம்) ஆகும். இது விலங்குபற்றிய அச்சம்.
வெகுளி
தடுத்து மற்றிவை யுரைத்தலும் வெய்யசூர் தடக்கை
புடைத்து வெய்துயிர்த் துரப்பியே நகைநிலாப் பொடிப்பக்
கடித்து மெல்லித ழதுக்கிமெய் பொறித்திடக் கனன்று
முடித்த னித்தலை துளக்கியே யின்னன மொழிவான்.
இதன்கண், சிங்கனுடைய வார்த்தையைக்கேட்டு சூரனுக்குண்டான கோபம்--ஸ்தாயிபாவம். சிங்கனுடைய வார்த்தை--பொருள் (ஆலம்பநவிபாவம்). அவைக்களமும், பகைவரை வியத்தலும் முதலியன -- உத்தீபநவிபாவம். கைபுடைத்தல், வெய்