Primary tabs
viii
“தமிழன்னை உறங்கிக் கொண்டிருக்கத் தான் ஒருவனாகத் தனித்து நின்று, கண்ணிமைகூட அசையாமல் அவளுக்குப் பகைவரால் துன்பம் எதுவும் நேராவண்ணம் காத்திருந்தான் ஒருவன்!அத்தகையானின் நல்லுயிர் இப்போது காற்றோடு காற்றாகக் கலந்து சென்று விட்டதே! என்பது இப்பாட்டின் பொருள்!
‘தமிழன்னைக்குக் கேடு வாராமல் அவ்வாறு காத்திருந்த காவலர் யார்தாமோ?’ என்று கேட்கத் தோன்றுகின்றதல்லவா? ஆம்! அவரே, ‘நாவலர்’ என்றும், ‘கணக்காயர்’ என்றும், ‘டாக்டர்’ என்றும் பல்லோராலும் பாராட்டப் பெற்ற ச. சோமசுந்தர பாரதியார்!அப் பேராண்மையாளர், 14.12.1959இல், இம் மண்ணுலக வாழ்வை நீத்தபோது, கவிஞர் கண்ணதாசன் பாடிய கையறு நிலைப் பாடலின் ஒரு சிறு பகுதிதான் இது!
வாழ்வும் வண்டமிழ்த் தொண்டும்
28.7.1879இல், எட்டயபுரத்தில் தோன்றிய நாவலரின் இயற்பெயர் ‘சத்தியானந்த சோமசுந்தரன்’ என்பது.தொடக்கக் கல்வியை எட்டயபுரத்திலும்;இளங்கலை, சட்டத் தேர்வுகளைச் சென்னையிலும் முடித்துக் கொண்டு, தூத்துக்குடியிலும், பின்னர் மதுரையிலும் வழக்கறிஞராக விளங்கிப், பெரும் பொருள் ஈட்டிப் பேரும் புகழும் பெற்றார்.இடையே தாமாகவே பயின்று, ‘முதுகலை’ப் பட்டமும் பெற்றார்!அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1933 முதல் 1938 முடிய ஐந்தாண்டுகள் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பேற்று, முனைவர் அ. சிதம்பரநாதச் செட்டியார் போன்ற, தமிழ் காக்கும் மாமணிகளை உருவாக்கினார்.இவர்தம் இல்லற வாழ்வின் பயனாய், இரு மனைவியர்க்கு, ஆடவர் இருவரும் பெண்டிர் மூவருமாக ஐந்து நன்மக்கள் பிறந்தனர்!
நாவலர் பாரதியார் செய்த செயற்கருஞ் செயல்கள் பலப்பல.ஈண்டுச் சிலமட்டும் சுட்டலாம்.
‘தேசியகவி’ சி. சுப்பிரமணிய பாரதியாரின் இளமைக்கால இனிய நண்பர் இவர்;இவ்விருவரும் எட்டயபுரத்திலும் நெல்லையிலும் ஒன்றாகவே பழகிவந்த பண்பினர். சி. சு. பாரதியார், தம் ஏழாம் வயதிலேயே கவி புனையும் பாங்கினை நேரிற்கண்டு, முதன்முதல் இவ்வுலகுக்கு எடுத்துரைத்த சிறப்பு