Primary tabs
ix
நாவலருக்கே உண்டு! ‘பாரதி’ எனும் பைந்தமிழ்ப் பட்டமும், இவ்விருவர்க்கும் ஒரே சமயத்தில், நெல்லை மாநகரில், யாழ்ப்பாணப் புலவர் ஒருவரால் வழங்கப்பட்ட சுவையான செய்தியை நாவலர் நம்பால் கூறி மகிழ்ந்ததுண்டு!அன்றுமுதற்கொண்டே, ‘சுப்பிரமணியம்’ ‘சுப்பிரமணிய பாரதி’ ஆனார்;‘சோமசுந்தரன்’ ‘சோமசுந்தர பாரதி’ ஆனார்!
தூத்துக்குடியில் வழக்கறிஞராயிருந்தகாலை, ‘செக்கிழுத்த செம்மல்’ எனப் போற்றப்படும் வ.உ. சிதம்பரனாருடன் நெருங்கிய நட்புக் கொண்டதோடன்றி, அவருடன் நாட்டு உரிமைக் கிளர்ச்சியிலும் ஈடுபட்டு, அரசியல் மேடைகளிலெல்லாம் தமிழிலே பேசி (அரசியல் மேடைகளிலும் ஆங்கிலத்திற் பேசுவதே சிறப்பெனக் கருதிய காலம்!) மக்களிடையே உரிமை வேட்கைகிளர்ந்தெழச் செய்தார்!வ.உ.சி. தொடங்கிய ‘சுதேசிக் கப்பல் கம்பெனி’யின் செயலராகவும் இருந்தார்!அண்ணல் காந்தியடிகளைத் தென்தமிழ்நாட்டுக்கு வரவழைத்த சிறப்பும் நாவலருக்கு உண்டு!மதுரையில் காங்கிரசு மாநாடு கூட்டிச் சி.ஆர். தாசு போன்றவர்களைப் பங்குபெறச் செய்தார்; தீண்டாமை ஒழிப்பு இயக்கத்திலும் தீவிரப் பங்காற்றினார்;‘உசிலங்குளம்’ என்ற ஊரில் தாழ்த்தப்பட்டவர்க்கென்றே அக்காலத்தில் தொடக்கப்பள்ளி ஒன்றை உருவாக்கினார்!நாவலர் பாரதியார், நாட்டு விடுதலையின் பொருட்டுச் சிறை செல்லவில்லை;எனினும் இவரின் அருமைத் திருமகனார் இலட்சுமிரதன் பாரதியார், மகளார் இலக்குமி பாரதியார் உள்ளிட்ட ஏழுபேர் சிறை சென்றுள்ளனர் என்பது இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத் தக்கதாம்!
நாவலர் பாரதியார் ஆற்றிய தொண்டுகளில் எல்லாம் தலையாயது ஒன்று உண்டு;அதுவே, அன்னைத் தமிழுக்குச் செய்த அரும்பணி!புதிய ஆராய்ச்சி நூல்களைத் தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் படைத்தல், படைப்பிலக்கியங்கள் உருவாக்குதல், தமிழ் மாநாடுகளில் தலைமை ஏற்று வீர உரையாற்றுதல், தமிழ் மாணவர் பலரை உருவாக்குதல், தமிழ்ப் புலவர்க்குப் பொருளும் அளித்தல், பேச்சாலும் எழுத்தாலும் தமிழ் உணர்வு ஊட்டுதல்.ஆய்வுக்கண் கொண்டு எதனையும் நோக்குதல், பிறர் கூறியதையே மீட்டும் கூறாமல் புதிதாக ஆராய்ந்து கூறுதல், அங்ஙனம் கூறும்போதும், ‘தமிழ் மரபு இது,