Primary tabs
xii
ஆனால் முன்னைய உரையாசிரியர்களோ நூற்கருத்தைப் பல்காலும் பிறழ உணர்ந்து, தத்தமக்குத் தோன்றியவாறெல்லாம் கூறி மயங்க வைத்துள்ளனர்.எனவே, தொல்காப்பியர்தம் உளக்கிடக்கையை உள்ளவாறு உணர்த்த விரும்பிய நாவலர் பாரதியார், ‘அகத்திணை, புறத்திணை, மெய்ப்பாடு’ என்னும் மூன்று இயல்கட்கும், முன்னைய உரையாசிரியர்களைப் போன்றே நூற்பாவாரியாக உரைவகுத்துத் தரலானார்.இவ்வகையில், இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பேராசிரியர் போன்ற உரையாசிரியர்களின்காலத்திற்கு நீண்ட இடைவெளிக்குப்பின், அவர்களைப் போன்றே மூன்று இயல்கட்குப் புத்துரை வகுத்து, அவ் உரையாசிரியர் வரிசையில் சேர்த்து எண்ணத்தக்க பெருஞ்சிறப்புக் குரியரானார் நாவலர் பாரதியார்!
இம்மூன்று இயல்களின் புத்துரைச் சிறப்பினைக் குறித்த கட்டுரைகள், இந்நூலின் பிற்சேர்க்கையாகத் தரப்பட்டுள்ளன.
எனினும், நாவலர் பாரதியார் கூறும் புத்துரைக்கு ஒவ்வோர் இயலிலிருந்தும் ஒவ்வொரு சான்று இவண் தரப்படுகின்றது :
“கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப”
(அகத். 1)
என்பது, அகத்திணையியலில் வரும் முதல் நூற்பா.“கைக்கிளை முதற்கொண்டு பெருந்திணை ஈறாக, முதலில் சொல்லப்பட்ட திணைகள் ஏழு என்பர் தமிழ்ச் சான்றோர்” என்பது இதன் கருத்து.இதற்கு இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும்,
“முற்படக் கூறப்பட்டன . . . . எனவே பிற்படக்
கிளக்கப்படுவன எழுதிணை உள!”
என்று, அடுத்த புறத்திணையியலில் கூறப்படும் ‘வெட்சி’ முதலான புறத்திணைகள் ஏழும் உண்டு என்பர்.
ஆனால் நாவலர் பாரதியாரோ, பின்வருமாறு விளக்கி, முன்னைய உரையை மறுப்பர் :
“இச்சூத்திரத்தில் அகத்திணையேழும் நிரலே கூறப் பெறாமையானும், ‘கிளக்கும்’ என்னாது‘கிளந்த’ என