தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

xiii

இறந்தகால எச்சம் பெய்த பெற்றிமையானும்.இதன் பின்னுள்ள சூத்திர வைப்பு முறையில் கைக்கிளையை முதலாகவும் அதனையடுத்து அன்பின் ஐந்திணையும் இறுதியிற் பெருந்திணையுமாக அமைத்துக் கூறப்பெறாமல், முதற்கண் ‘அன்பின் ஐந்திணை’ கூறி, அவற்றின்பின் ‘கைக்கிளை, பெருந்திணைகள்’ தொடர்ந்து கூறப்படுவதனால்முற்படக் கிளந்த எழுதிணை’ என்பது அகத்திணையியலில் இச்சூத்திரத்தின் பின் அமைத்துக் கூறப்பட்ட முறையைச் சுட்டாதென்பது வெளிப்படை. எனவே ஈண்டு, ‘முற்படக் கிளந்த’ என்பது, இடத்தால் முற்படக் கூறும் அமைப்பு முறையோடு பொருந்தாமையால், காலத்தால் முற்படக் கிளந்த ஒன்றினையே குறிக்குமென்பது தேற்றமாகும்!”

என்று புத்துரை கூறுவதனோடு, “இந்தச் சூத்திரத்திற்கு முன்னர்ச் சில சூத்திரங்கள் இருந்திருக்க வேண்டும்;அவற்றில், பொருள் ‘அகம் புறம் என இருவகைப்படும்.அவற்றுள் பின்னர்க் கூறப்படும் புறத்திணை ஏழு ஆதல் போலவே அகத்திணையும் ஏழாகும்; அவ் அகத்திணையும் ‘கைக்கிளை, அன்பின் ஐந்திணை, பெருந்திணை’ என ஏழாக வகுக்கப்படும் என்பன போன்ற கருத்துக்கள் இடம் பெற்றிருக்கும்!” என்று விளக்கமும் தருவது அறிவுக்கு விருந்தாகும்!

“எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே”

(புறத். 7)

என்பது புறத்திணையில் வரும் நூற்பா.இதற்கு, முன்னைய உரையாசிரியர்கள் கூறும் உரைக் கருத்து வருமாறு :

“இருபெரு வேந்தர்க்கும் இடையீடாகிய மண்ணிடத்து வேட்கையானே, ஆண்டு வாழ்வோர்க்கு அஞ்சுதல் உண்டாக அந்நாட்டிடத்தே சென்று, ஒரு வேந்தனை ஒருவேந்தன் கொற்றம்கோடல் குறித்தல் மாத்திரைத்துவஞ்சித்திணை; ஒருவன் மண்ணசையானே மேற்சென்றால், அவனும் அம்மண்ணழியாமல் காத்தற்குஎதிரேவருதலின் இருவர்க்கும் மண்ணசையால் மேற்சேறல் உளதாகலின், அவ்விருவரும் வஞ்சிவேந்தர் ஆவர் என்றுணர்க!”

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 21-08-2017 15:25:14(இந்திய நேரம்)