Primary tabs
xvii
மலர்ந்து மனைமாண்பு வளர்க்கும் தமிழரின் களவறக்காதலை ஒவ்வாதாதலின், ‘காமக் கூட்டம் யாழ்த்துணைமையோர் மணமாம்’ என்றார்.காதல் மீதூரக்கலந்து மகிழ் கந்தருவர் கூட்டம், நீளாது நிலையாது உலகறிய மணந்து நிலவா தொழியினும் காதலால் நேர்தலால், காதல் வேண்டாத ஆரியர் பிறவகைக்கூட்டமேழையும் விலக்கிக், களவுக் கூட்டம் காதலளவில் கந்தருவர் புணர்ச்சியை ஓரளவொக்குமெனுங் குறிப்பால், தமிழர் களவுத் திணை அன்புக் கூட்டம், காதலொடு கூடுங் கந்தருவர் கூட்டத்தியல்பே என்று கூறப்பட்டது!”
இதன்கண், வடவர் கந்தருவத்திற்கும் தமிழர் களவொழுக் கத்திற்குமிடையே காணலாகும் நுட்பமான வேறுபாட்டைச் சுட்டியமை அறியலாம்.
‘கற்பியலி’ல் வரும் நூற்பா ஒன்று :
“காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே!”
(கற்பி : 51)
இந் நூற்பாவுக்கு முன்னைய உரையாசிரியராம் நச்சினார்க்கினியரின் உரையினை மறுக்க வந்த நாவலர் பாரதியார்,
இல்லறத்தின் பின்னர்க் கடைநாள் துறவுநிலை நின்று, மெய்யுணர்ந்து வீடு பெறுப;இவ் வீடு பேற்றினை இன்றியமையாது இல்லறம் என்பது இதன் பயன் எனும் நச்சினார்க்கினியர் முடிபு.சைனர் துணிபா? அன்றி ஆசிரியர் சிலருக்கும் வைதிக முடிபா!”
என்ற வினாத் தொடுத்து,
“தமிழ்கூறு நல்லுலகில் வழங்கும் மரபும், தமிழ்நூல் இலக்கண இயல்புகளுமே கூறவந்த தொல்காப்பியர், தம்குறிக்கோளை மறந்து, ஈண்டுத் தமிழரின் அகப்புறப்பகுதிகளில் பிறபிற சமயக் கோட்பாடுகளையும் பேதுறப்பெயர்த்துப் பேசித் தலைதடுமாறினரெனக் கொள்ளப்போதிய காரணமில்லை.அதனால் இவ்வுரை ஆசிரியர் கருத்தாகாமை விளக்கமாம்!”