Primary tabs
xviii
என்று கூறியதனோ டமையாது,
“உழுவலன்புடையார் இருவரும் மணந்து, பொருள் படைத்து, மாண்ட மனையறம் நிகழ்த்திக் கற்புக் கனிந்த அற்புக்கூட்டம் வீறுபெற்றுச் சிறந்தநாளில், சிறந்த தம்மக்களொடும், தம் மனையறத்திற்கு உரிமைச் சுற்றமாகிய பணியாளர் முதலிய பிற செயற்கைத் துணைவர் பலரொடும், தலைவனும் தலைவியும் பல்லாற்றானும் மாண்புபெற்ற அன்பு கனிந்த கற்புக் கூட்டம் அனுசரித்தல், முன் தாமே தலைப்பட்டுத் தழுவி வழுவாக் களவொழுக்குக் கடைகூட்டி வைத்த பயனன்றிப் பிறிதன்றாம்!”
எனப் புத்துரையும் காண்பர்.
‘செய்யுளியலி’லும், ‘மண்டிலம், குட்டம்’ என்பவற்றிற்கும் புத்துரை காண்பது எண்ணத்தக்கது.
இவ்வாறு நாவலர் பாரதியார் கண்ட இப் புத்துரைகளின் சிறப்பினைக் குறித்து, எனது ‘முனைவர்’ப் பட்ட ஆய்வு நூலில் விரிவாகச் சன்றுகளுடன் எடுத்துக் காட்டியுள்ளேன்.அதில் வரும் ஒரு பகுதியினை இவண் சுட்டுதல் சாலும் :
“திருவள்ளுவரைப் போலவே தொல்காப்பியரைப்பற்றியும் கட்டுக்கதை வழங்கிவந்தது. திருவள்ளுவரைப் பற்றி வழங்கிய கட்டுக்கதையைத் தம் ‘திருவள்ளுவர்’ எனும் ஆராய்ச்சிநூலில் ஆணித்தரமாக மறுத்ததுபோலவே, தொல்காப்பியரைப்பற்றி வழங்கும் கட்டுக் கதையையும் தம் ‘தொல்காப்பியப் புத்துரை’ நூலில் வன்மையாக மறுத்துக் ‘காப்பியர்’ எனும் பெயர் எப்படி உண்டாயிற்று என்பதையும் தக்க சான்றுகளுடன் விளக்கியவர் நாவலர் பாரதியார்.நூற்பாவுக்கு உரை கூறுமிடத்துக் ‘கருத்து - பொருள் - குறிப்பு’ என மூன்றாகப் பகுத்து எளிய முறையில் உரை கூறுதல் - சிலவிடங்களில் முன்னைய உரையாசிரியர்களின் நடையைப் பின்பற்றிச் செல்லுதல் - புத்தம் புதிய சான்றுகள் காட்டி விளக்குதல் ஆகியன. இவருடைய புத்துரைகளில் காணத்தகுவன.நூற்பா முழுமைக்குமாகப் புத்துரை கூறுவது, அன்றி நூற்பாவில் வரும் சொல் அல்லது சொற்றொடருக்குப் புத்துரை கூறுவது என்பது இவரது இயல்பு.அதேவேளையில்,