Primary tabs
xix
முன்னைய உரையாசிரியர் கூறுவனவற்றுள் ஏற்கத்தக்கன இவை எனக்காட்டி அன்னவரைப் போற்றுதலும் செய்வார்.சொற்பொருள்நயம் காட்டுவதிலும் மாறுபட்ட கருத்துக்களை மிக வன்மையாக மறுத்துப் புத்துரை கூறுவதிலும் இவரது புலமையை அறிய முடிகின்றது.பூரணர், நச்சர், பேராசிரியர் இம்மூவர் உரையிலும் நச்சர் கூறும் உரையே, பெரும்பாலும் இவரது மறுப்புக்குள்ளாகிறது.நாவலர் பாரதியாரது உள்ளம்தொல்காப்பியரின் கருத்தினை அறிய விழைந்ததுஎன்பதில் ஐயமில்லை! இவ் வகையில் நுண்மாண்நுழைபுலமிக்க பண்டை உரையாசிரியர்கள் வரிசையில்வைத்து மதிக்கத்தக்கவராக நாவலர் பாரதியார்விளங்குகின்றார்! ‘முன்னைய உரையாசிரியர்கள்கூறிவிட்டார்கள்.எனவே அதனை ஏற்கத்தான்வேண்டும்’ என்ற எண்ணத்தை மாற்றித்தொல்காப்பியத்தை இப்படியும் ஆராய்ச்சிக்கண்கொண்டு நோக்கலாம் - புத்துரை கூறலாம் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தவர்களில் நாவலர் பாரதியாருக்குத் தனிச் சிறப்பு உண்டு! எனவே ‘நாவலர் பாரதியாரின் தொல்காப்பியப் புத்துரைகள்’ தமிழ் இலக்கிய உலகிற்குக் கிடைத்த அருங்கொடைகள் எனலாம்!”
(நாவலர் சோமசுந்தர பாரதியாரின்
தமிழ் இலக்கியப்பணி’, ப. 288)
முடிவுரை
தொல்காப்பியப் பொருளதிகார முழுமைக்குமே நாவலர் பாரதியார் இத்தகைய புத்துரைகள் எழுதாமற் போனாரே என்ற ஏக்கம், நமக்கு உண்டு!எனினும், இவர் எழுதிய புத்துரைகளையேனும் அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டும் என்பது எமது விருப்பம்!
வாழ்க நாவலர் பாரதியார்!