தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purapporul-Venbamalai


10. பொதுவியற்படலம்

சேரனுடைய அடையாளமாகியபனந்தோட்டையும், பாண்டியன் பூவாகிய வேம்பையும்,சோழன் பூவாகிய ஆத்தியையும் சிறப்பித்தல் மரபு.அரசனுக்குக் குறைவு வருமாயின் வாடுதலையும்ஆக்கமுண்டாயின் தழைத்தலையுமுடைய உன்னமென்னும்மரத்தின் நிலையைக்கண்டு அரசனது ஆக்கத்தைஅறிதலும், ஆட்டுக்கிடாயின் மேல் ஊர்ந்துவரினும்வீரம் குன்றானென அரசனைச் சிறப்பித்தலும்,இளம்பருவத்திலேயே நாடுகாவலை அரசர்மேற்கொள்ளுதலும், வீரர்கள் காலில் வீரக்கழலைஅணிதலும் பண்டை வழக்கங்கள்.

ஒரு வீரன் போரில்இறந்துபட்டால் அவனுடைய ஞாபகார்த்தமாகநடும்பொருட்டு நல்ல கல்லாகத் தேர்ந்து அதனைக்கொணர்ந்து புனலிலே இட்டு வைப்பர்; பிறகு அதில்அவ்வீரனது பெயரையும் சிறப்பையும் எழுதுவித்துஅக்கல்லை நாட்டிப் பூசை செய்து வாழ்த்துவர்;அப்பால் அதற்குக் கோயில் அமைப்பர்.

சிறப்பிற்பொதுவியற்பால்

பாலைநிலத்தில் தன் கொழுநனைஇழந்த தலைவி வருந்துதல், அந்நிலத்தில் தன்மனைவியை இழந்த கணவன் வருந்துதல், தன் மனைவியைஇழந்த பின்னர்க் கணவன் வருத்தத்துடன் தனியேவாழ்தல், தன் கணவனை இழந்தபின்னர் மனைவிகைம்மை விரதம் பூணல், ஒரு பெண் புத்திரனைப்பெறுதலாகிய தன் கடமையை நிறைவேற்றிய பின்னர்இறந்து படுதல், ஒரு குடும்பத்திற் பிள்ளை இறந்துவிடஅதனாற் சுற்றத்தார் வருந்தல், தலைவன் இறந்தபின்பு மனைவி தானும் இறப்பதற்காக மாலைக்காலத்திலே எரிபுகுதல், தலைவன் இறந்தானெனக்கேட்டவுடன் மனைவி உயிர் நீங்குதல், தலைவன் தான்நினைத்த காரியத்தை நிறைவேற்றாமற் பகைவரால்இறந்துபடல், தலைவன் வருகையை அறிதற்காகநற்சொல் முதலிய நிமித்தங்களை எதிர்பார்த்து நிற்கும்தலைவி அவை வேறுபாடு உணர்த்துவதை அறிந்துநடுங்குதல், போருக்குச் சென்ற தலைவனைப் பற்றி எண்ணித் தலைவி வருந்தல், போரிலே தலைவன்இறந்துபடத்தலைவி வருந்தல், மன்னன் இறந்தானாகஉடனிருந்தோர் வருந்தல், இறந்தவனுடைய புகழைப்பாடுதலென்பன இப்பகுதிக்குரிய செய்திகளாம்.

காஞ்சிப்பொதுவியற்பால

அறிஞர் உலகத்தியலுள் முடிந்தபொருளாகிய அறம் பொருள் இன்பங்களைப்பற்றிக்கூறல், உலகத்து நிலையாமையைச் சொல்லல்,முனிவர்களால் தெளியப்பட்ட பொருளை யுரைத்தல்,வீட்டுலகத்தைப் பற்றிய செய்தி,மேல்வரும்பொருளை அறிவித்து நிலையாமையை

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-09-2016 21:37:52(இந்திய நேரம்)