தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Purapporul-Venbamalai

தனது வேறுபாட்டைக் கண்டு அயலார் சொல்லும் பழிமொழிக்குநாணி வாடுவாள். தனது மேனியிற்பசலை உண்டாக அதனால் அழகுகெட மெலிந்து தலைவனைமீண்டும் காணவேண்டு மெனத் துணிவாள்.பகற்பொழுதைக் கோபிப்பாள். இரவிலும் மனமயக்கம்மிகவுடையவளாகி வருந்துவாள். அப்பொழுது உண்டாகும்கனவில் தலைவனைக் கண்டு பின்னர் விழித்துஅவனைக் காணாமல் வாய்விட்டுப் புலம்புவாள். பிறகுஇரவில் அவனை நாடிச்செல்ல விரும்பி, 'நான்தலைவனைத் தேடிச் செல்லத் துணிந்தேன்; இதனைமகளிர் யாவரும் அறிக' எனக் கூறுவாள்.

12. பெருந்திணைப் படலம்

இதிற் பொருந்தாக் காமத்தைப்பற்றியசெய்திகள் கூறப்படும். அவைவருமாறு ;

பெண்பாற் கூற்று

ஒரு தலைவனைக் கண்ட தலைவிஒருத்தி தனது வேட்கையை அவன் முன்னே சொல்லிஇரந்து அவன் பிரிந்த காலத்து ஆற்றியிருந்து அவன்வருதலை எதிர்பார்த்திருப்பாள். அவனது வரவைஎதிர்நோக்கிப் பார்க்கும் நிமித்தங்கள்வேறுபடுவதையறிந்து வாரானென்று எண்ணி வருந்துவாள்.பின்பு அவனைக் காணவேண்டுமென்னும் ஆசையினால் தனதுவீட்டை விட்டுச் செல்வாள். அவன்பால் இல்லவை கூறிநகைத்து ஊடிப்பிறகு வருந்துவாள். மாலைக்காலத்தில்இரங்குவாள். தலைவனோடு புனல் விளையாடும் பரத்தையை ஏசுவாள். தலைவன் பரத்தையை நீங்கித்தன்பால் வந்தகாலத்தில் அவனுடைய கோலத்தைக்கண்டுசினங் கொள்வாள். அவனோடு அளவளாவி மகிழ்வாள். அவனை மாலையினாற் கட்டிக்கொணர்ந்து தன் வீட்டிற் புகுவாள். தலைவனோடு அளவளாவுங்காலத்திற் குழைவாள். ஊடலினால் நெகிழ்ந்து மிக்க துன்பத்தோடு தங்கிஇருக்கும்பொழுது அவனுடைய வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்துஅவன் தன் அடியிலே பணிந்த காலத்தில் மனமிரங்குவாள்.இரவில் தன் பாயலினின்றும் நீங்கி அவன் உறங்கும்இடத்திற்குச் செல்வாள்.

தலைவன் இரவில் வேறொரு மகளைஎண்ணித் தன்னை நீங்கும் காலத்தில் அதனைக்கண்டுகொண்டு 'செல்வாயாக' என விடுப்பாள்.

இருபாற் பெருந்திணை

தலைவன் தலைவியைப் பிரிந்துசெல்லுதலை முன்பு கருதிப் பின்பு போதலை ஒழிதல்,தலைவன் மடலூர்தல், தலைவியினது துன்பத்தைக் கண்டதோழி தலைவன்பால் தூதாகச் செல்லல், அவள் அவனுக்குத்தலைவியின் நிலையைச் சொல்லல், தலைவியின் தனிமைவருத்தத்தைக் கண்ட தோழி செயலற்று வருந்தல், பருவங்கண்ட தோழி தலைமகளைஆற்றுவியாமல் இப் பருவம் தலைவன் சொன்னதோஅன்றோவென

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-09-2016 21:38:07(இந்திய நேரம்)