Primary tabs
மயங்கல், தலைவி பருவம் அன்றெனத் தெளிதல்,காமம் எல்லை கடந்தமையால் தலைவன்மயங்கியிருத்தல், தலைவி தான் விரும்பும் தலைவன்இன்னானென்று ஊரினர் அறியாதிருத்தலைக் கூறல்,தலைவனது அருளைப் பெரும் பொருட்டுத் தலைவிவெறியாடல், தலைவனுடைய பாணன் வந்தமையைத் தோழிதலைவிக்குக் கூறல், தலைவன் தனக்குஎளியனென்பதைப் பரத்தை கூறல், தலைவன்பரத்தையரை விரும்புவனென்று தோழி விறலிக்குச்சொல்லல், பரத்தையர் மூப்புடையராயினும் தலைவன்அவரை விரும்புவானென்று இற்பரத்தையின் தோழிகேட்ப விறலிகூறல், தம்சேரிக்குத் தலைவன் தேரில் வருதலைச் சேரிப் பரத்தையின் தோழிஇற்பரத்தையின் தோழிக்குச் சொல்லல், தலைவன்பரத்தையர் வீட்டில் துயின்ற படியை விறலி கூறல்,தன் மனைவியைக் கணவன் நீக்கி விடுதல், தலைவன்தலைவியின்பால் விருப்பம் ஒழிதல் என்பன இப்பகுதியிற்கூறப்படும்.
ஒழிபு
பாடாண் பகுதியிலும் வாகைப் பகுதியிலும்சொல்லப்படாமல் ஒழிந்தவை இதிற் சொல்லப்பட்டன. அவை வருமாறு:
பாடாண் ஒழிபு
பாணர் முதலியோர் தமக்குக்கொடுத்தவரைப் புகழ்ந்து கொடாதவரைப் பழித்தல்.
வாகையின் ஒழிபு
வாணிகர் பலவகையாற் பொருள்திரட்டிப் பிறர்க்கு உபகரிக்கும் இயல்பாகியவாணிகவென்றி, மல்லர் தம்முள் மற்போர் செய்துவென்றி பெறுதல், உழவன் பருவங்கண்டு உழுதல்முதலியவற்றை உரியபடி செய்து பயிர்விளைத்தலாகியஉழவன் வென்றி, பறையை யறைந்துவிட்ட ஏறுகளைஇடையர் தழுவுதல், கோழிகளை ஒன்றோடொன்று போர்செய்ய விடுதல், ஆட்டுக்கிடாவைப் பொரவிடுதல்,யானையின் வீரத்தைக் கூறல், சிவல் குறும்பூழென்னும்பறவைகளைப் பொரவிடுதல், கிளியையும் பூவையையும்ஒன்றற்கொன்று மாறாகப் பேசவிடுங்கால் பூவையைக் கிளி வெல்லுதல்,கிளியைப் பூவை வெல்லுதல், குதிரையேற்றத்தில்ஒருவரை ஒருவர் வெல்லுதல், தேரேற்றத்தில் ஒருவரைஒருவர் வெல்லுதல், மகளிர் யாழ் வாசித்துஒருவரையொருவர் வெல்லுதல், சதுரங்கமாடி மகளிர்ஒருவரையொருவர் வெல்லுதல், அவர் கூத்தாடிவெல்லுதல், பாடலில் அவர் ஒருவரை யொருவர்வெற்றிகொள்ளுதல், பெண் யானையைப் போலஆடுதலிலும் அதனை நடத்துதலிலும் வெல்லுதல் என்பனஇதிற் கூறப்படும்.