தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Purapporul-Venbamalai

6. உழிஞைப்படலம்

பகைவருடைய மதிலைக்கொள்ளக்கருதி மன்னர் உழிஞைப் பூவையேனும் மாலையையேனும்சூடிச் செல்வர். அக்காலத்தில் நிகழ்வன வருமாறு :-

அரசன் தான் செல்லுவதற்குமுன்குடையையும் வாளையும் நன்னாளில் முன்னே செல்லவிடுத்து,முரசத்திற்குப் பூசைசெய்து முழக்கிப் படைகளுடன் ஊக்கம்வன்மை சூழ்ச்சிமுதலியவற்றை யுடையவனாகி எழுவான்.

அக்காலத்தில் திருமால் சோவென்னும்மதிலையும் சிவபெருமான் திரிபுரங்களையும் அழித்தசெயல்களையும்,முருகவேள் சூரபன்மாவை வெல்லக் கருதிக் காந்தளாகியஅடையாளப் பூவைப் புனைந்ததையும் அரசனுக்குஊக்கமுண்டாதற் பொருட்டுச் சிலர் சிறப்பித்துக்கூறுவர்.

அரசன், படைகளுடன் சென்றுபகையரசனின் மதிலின் புறத்தே தங்குவான்.வீரர்கள் பகைவருடைய மதிலின் இயல்பை அறிந்துகூறுவார்கள். சிலர் கேடகப் படையைச் சிறப்பிப்பர்.

யானையை ஏவி அதன் கொம்பால் மதிற்கதவைப் பிளக்கச் செய்து மதிலைக் கைக்கொள்ளுவதும்,காவற்காட்டைக் கடந்துபுகுவதும், அக்காலத்திற் கேடகத்தை உடையவர்கள்ஆரவாரித்து ஆடிக்கொண்டு செல்லுதலும் வழக்கங்கள்.

காவற்காட்டைக் கடந்த பின்னர்அகழியின் புறத்தே தங்கி நாவாய் தோணி முதலியவற்றில்ஏறிப் பகைவருடன் வீரர் போர் புரிவர். பின்பு மதிலின்புறத்தே செறிந்த வீரர்கள் கற்பொறி முதலிய மதிற்பொறிகள்பலவகையாகத் தம்மை வருத்தினாலும், அஞ்சாமல் அம்மதிலின்மேல்ஏணியைச் சார்த்தி ஏறி அதற்குள் அமைந்த காவற்காட்டிற்குதிப்பர். சிலர் அம்மதிலின் உள்ளேஇருப்பவருடையமிகுதியை அறிந்து கூறுவர்.

வீரர் அரணிலுள்ளவர்களோடுபொருது வெல்வர். விடியற்காலையில் மதிலிலுள்ளஅரசனது முரசம் அதிர, அதனாற் சினமிக்குப் புறத்திலுள்ளஅரசன் சமைத்தற்குரிய அகப்பை முதலியகருவிகளை மதிலினுள் எறிந்துவிட்டு, 'இன்று மாலைக்குள்இம்மதிலைக் கைக்கொண்டு உட்புகுந்து பிறகே சமைத்துஉண்போம்' என்று சபதம் கூறுவான்;மதிலை அழித்து யானைகளைக் கைக்கொள்வான்.

இங்ஙனம் புறத்தே ஓர் அரசன்முற்றியிருத்தலை யறிந்து மதிலிலுள்ளவனுக்குநண்பராகிய அரசர் அவ்வேற்றரசனோடு பொருது துரத்தவருதலும் உண்டு.

மதிலைக் கைக்கொண்டபிறகுஅரசன், அதனுள் கழுதையேரால் உழுவித்துக் கவடியையும்குடைவேலையும் விதைப்பான். பின்பு வீரர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-09-2016 21:38:52(இந்திய நேரம்)