Primary tabs
அவனது வாளைத் தீர்த்த நீரால் மஞ்சனமாட்டுவர்; மன்னன் மதிலைக் கைக்கொண்ட வெற்றியைப்புகழ்வர். மதிலகத்து அரசனுடைய மகளை வேண்டி முற்றுகையிடலும்உண்டு.
சில பகையரசர் பணிந்து திறைகொடுப்ப எதிர்த்தஅரசன் முற்றுகையை ஒழிவான். பகைவர் அடிபணிந்தபின்னும் நீண்டகாலம் இருந்த இருப்பிலே அவன்இருத்தலும், பல அரண்களிலுமுள்ள வேந்தர் யாவரும்அவனுக்குமுன் தம் வலியிழந்து தாழ்ந்து நிற்றலும்உண்டு.
7.தும்பைப்படலம்
போர்புரியத் தொடங்குகையில்அரசர்கள் தும்பைமாலையேனும் பூவையேனும் சூடிப் பின்போர்புரிவர். அக்காலத்து நிகழ்வன வருமாறு:
போர்செய்வதற்கு முன்பு அரசன்தன் படை வீரர்களுக்குப் போர்ப் பூவாகிய தும்பையையும்நாடு, விளைநிலம், பொருள், யானை, குதிரை முதலிய வரிசைகளையும்வழங்குவான். அக்காலத்தே போரினால் இருவகைச் சேனைகளும்பொருதுமடியாமற்காத்தல் அரசன் கடமையென்று சிலர்கூறுவர் ; சிலர் காலந்தாழ்க்காமற் போர்செய்வதால் உறுதி யுண்டாகுமென்று மொழிவர்; வேறுசிலர் அரசனுடைய படையின் வீர மிகுதியைப் பாராட்டிப்பகைவர் கெடுவரென இரங்குவர். யானை,குதிரை முதலியன தத்தம் ஆற்றலிற் சிறந்துவிளங்கும். வீரருட்சிலர், 'யாம் பகைவர்களுடையமுன்படையைத் தடுக்கும் வன்மையுடையேம்' என்று தம்வீரத்தைஎடுத்துக் கூறுவர்.
போர்புரியுங் காலத்தில் தனியேநின்றஅரசனைப் பகையரசர் பலர் சூழ்ந்துகொள்ள, அங்கேயுள்ள தனி வீரனொருவன்பொருது அவர்களை வெல்வதுண்டு.
அரசனது தேர் உதிரவெள்ளத்திற்பகைவருடைய பிணங்களின் மேல் ஊர்ந்து வரும்.போரில் யானையை எறிந்து பட்ட வீரரைக்குறித்துப் பாணர் நெருப்பை மூட்டிச் சாப்பண்ணாகியவிளரியைப் பாடுவர்; அவ்வீரர் வீரசுவர்க்கம் புகுவர்.
போரில் இரண்டுபக்கத்து அரசர்களும்தம் படைகளுடன் அழிவதும் உண்டு.
தம் சேனை முதுகிடுங்கால் வீரர்சிலர் அதன் பின்னே நின்று, தூரத்தில் வரும்பகைவரோடு போர்புரிவர். சிலர் தம் கையிலுள்ளவேல்களை யானைகளின்மேல் விட்டு ஆயுதமின்றிநின்றபொழுதும் தம் தோளையே கொம்பாகக் கொண்டுஆணெருமையைப்போல எதிர்த்து வெற்றி கொள்வர்.சிலர் பகைவரைக் கொன்று வேலைச்சுழற்றிக் கொண்டுஆடுவர். சிலர் தம்மேல் தைத்த வேலைப்பறித்து அதனையே கொண்டு பகைவரோடு போர்செய்வர்.