Primary tabs
வெற்றி பெற்ற வேந்தனது தேரின் முன் வீரர்கள் ஆடுவார்கள். அத்தேரின் பின் வீரர்களும் விறலியர்களும் ஆடுவார்கள். அதற்கு முன்னும் பின்னும் பேய்கள் உணவுபெற்ற உவகையாலே ஆடும்.
வீரர் சிலர் தம்முடைய வேல்பட்டு விழுந்த யானைகளின் கீழ் அகப்பட்டு உயிர்நீப்பர். மன்னனோடு வாள்வீரர் முழங்கி ஆடுவர். இரண்டு படையினரும் ஏத்தும் வண்ணம் வீரத்தோடு படைநடுவே மன்னன் நிற்பான்.
வீரர் சிலர் தம் உடம்பில் அம்புகள்பட்டு நிலத்தைத் தீண்டாமற் கிடப்பார்கள். போரிற்பட்ட வீரரை அவர்கள் மனைவியர் வந்து கண்டு தழுவுவர். அவர்களுட் சிலர் தம் கணவர்கள் விழுப்புண்ணோடு பட்டதைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் சொரிவர்.
தம் வேந்தன் போரில் இறந்துபடின் வீரர் தம் உயிரையும் போக்கிக் கொள்வர். போரிற்பட்ட தம் கணவரைக் காணும் பொருட்டுக் குடிப்பிறந்த மகளிர் தம் வீட்டை விட்டுத் தனியே போர்க்களத்தை நோக்கி வருவர்.
யாவரும் புகழை நிலைநிறுத்திப் போர்க்களத்தில் மடிவதும் உண்டு.
8. 1வாகைப்படலம்
வாகை மாலையைச் சூடிப் பகைவர்பால்வெற்றி கொள்வர் அரசர். இப்படலத்தில் அரசர்,அந்தணர், வணிகர், வேளாளர், மறமகளிர் முதலியவர்களின் இயல்பும்சிறப்பும் சொல்லப்படும். அவை வருமாறு:
அரசன்: அரசன் நடுநிலைமையையும் ஓதல், வேட்டல்,ஈதல் படைக்கலம் பயிறல், பல்லுயி ரோம்பலென்னும்ஐந்து தொழிலையும் நான்கு வேதத்தினையும் மூன்றுதீயினையும் இரு பிறப்பினையும் உடையனாகிப் பூமியைப்பாதுகாத்துவருவான். அவனுடைய அரண்மனையில் வெற்றி முரசு முழங்கும். சேனையாகிய வரம்பையுடைய போர்க்கள மென்னும் வயலுள் கோபமாகிய விதையை விதைத்து வேலாகிய கோலையும் யானையாகிய எருதையும் உடையவனாகிப் புகழை விளைவிக்கும் உழவனாகஅரசன் உருவகஞ்செய்து புகழப்படுவான். போரை வென்ற அரசன் பேய்கள் வயிறார உண்ணும் வண்ணம்.2களவேள்வி செய்வான்; அவனுடைய தேரின் முன்னே பேயும், பின்னே விறலியரும் வீரரும் ஆடுவர்.
'உன்னுடைய கீர்த்தியையும் பெருமையையும் எண்ணித் தருக்கினாற் பிறரை எள்ளுதலை நீக்குவாயாக' என்று அறிவுடையோர் அரசனுக்குக் கூறுவர். தன்னுடைய மனைவியைப்பிரிந்து போர்மேற் சென்று பாசறையில் தங்கியகாலத்தில் ஐப்பசி கார்த்திகை மாதங்
1. இப்படலத்தில் அங்கங்கே கூறப்படும் செய்திகள் சிலபயன் கருதி ஒருவகைப்படுத்திக் கூட்டி இங்கே எழுதப்படுகின்றன.
2. களவேள்வி பரணி நூல்களில் விரிவாகக் கூறப்படும்.