தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Purapporul-Venbamalai

களாகிய 1கூதிர்க் காலத்திலும் 2வாடைஅதிகமாக வீசும் காலத்திலும் தான்மேற்கொண்ட செயலை விட்டு நீங்காமல் அவன்இருப்பான். குற்றமின்றி மனுநீதியின்படிசெங்கோல் செலுத்தி எல்லா வுயிருக்கும் சூரியனைப்போலஇருத்தல் அரசனது முறைமை. அவனுடையகாவல் இன்றியமையாததென்று யாவரும் சிறப்பித்துக்கூறுவர். போரிற் பகைவரைவென்றபின் அக்களத்தைத் தனதாக்கிக் கொள்ளல்அரசன் இயல்பு.

அரசனது குடையைப் பலர் பலவாறு சிறப்பிப்பர். 'தன்பகைஞர்களை அடக்கி உலகில் சமாதானத்தை நிலைநிறுத்தினமையால்இவனுடைய கண்கள் சினக்குறிப்பின்றி உறங்குகின்றன' என அவன் துயிலுதலைச்சிறப்பித்துப் பாராட்டுவர்.

அந்தணர்: நான்குவேதங்களையும் கற்ற அந்தணர் வேள்வி செய்வர்;இரண்டு பெரிய வேந்தர்களுக்கு இடையேயுள்ள மாறுபாட்டைநீக்கும் பொருட்டுத் தூதுபோவர்.

வணிகர்: உழுது அதனால்உண்டாம் பயனைக் கைக்கொண்டு பசுவைப்பாதுகாத்துக் குற்றமற்ற பண்டங்களைவிற்றுநான்மறை முதலியவற்றைக் கற்று முத்தீயைஆராதித்துப் பொருளின் தன்மையைச்சீர்தூக்காமல் வழங்கும் கொடையினையுடையவர்வணிகர்.

வேளாளர்: அந்தணர் அரசர்வணிகரென்னும் மூவரும் விரும்ப அவருக்கு வேண்டியஉதவிகளைச்செய்து கழனியின்கண் உழுவர் வேளாளர் ;அவர் பூமியிலுள்ளார்க்கெல்லாம் உயிரைப்போன்றவராவர். அவர்களுடைய ஏர் வாழ்கவென்றுதடாரிப் பறையைக் கொட்டிப் பொருநர் வாழ்த்துவர். அப்பொருநர்களுடைய வறுமைநீங்கும்படி வேளாளர் உபகரிப்பர்.

அறிவன்: சூரியனைப் போல மூன்றுகாலத்தையும் நன்றாக அறிந்து என்றும் பிறழாதபடிகூறுபவன் அறிவன்.

தாபதர்: தவஞ்செய்பவர்களாகிய தாபதர் நீரிற்பலமுறை மூழ்குவர்; வெறுந்தரையிலே படுப்பர்;மான்றோலை ஆடையாக உடுப்பர்; சடைகள் பூமியிலேபுரள உலவுவர்; அக்கினியை ஆராதிப்பர்; ஊருக்குள்வாராமற் காட்டிலேயுள்ள காய்கனி கிழங்குகளைஉண்பர்; தெய்வத்தை வழிபட்டு அதிதிகளை உபகரிப்பர்.

சான்றோர்: அரசனுடையநியாயசபையில் சான்றோர் இருப்பர். அவர்குடிப்பிறப்பு, கல்வி, நற்குணம், வாய்மை, தூய்மை,நடுவுநிலை, அழுக்காறிலாமை, அவாவின்மை யென்னும் எட்டுஇயல்புகளையுடைய


1. தலைவன் தலைவியுடன் இருந்துஇன்புறும் குறிஞ்சித் திணைக்குரிய காலம் இக்கூதிரேயென்பது இங்கேநினைவிற் கொள்ளற்குரியது.

2. நெடுநல்வாடையென்னும் பாட்டில் இச்செய்தி விரிவாகக் கூறப்படும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-09-2016 21:39:15(இந்திய நேரம்)