தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Purapporul-Venbamalai

வராதல் முறை. வரும் வழக்கை நியாயந்தீர்த்தற்பொருட்டுப் பன்முறை வினாவிடைகளால்ஆராய்ந்து நிச்சயிப்பர் ; எக்காலத்தும் தம்அமைதி குன்றார்.

சோதிடர்: உரிய நூல்களைப்பலமுறை கற்று அவற்றில் தேர்ச்சி பெற்று வானத்திலும்பூமியிலும் உண்டாகும் நிகழ்ச்சிகளை ஆராய்ந்துகூறுதல் சோதிடரது இயல்பு.

பிற செய்திகள்: வீரக்குடியிற்பிறந்த மகளிர்கூட வீரமுடையராகி இருத்தலும்,பரம்பரையாக அக்குடியில் வீரர்கள் இருந்துவருதலும், அவர்களுடைய இடம் பிறராற் சிறப்பிக்கப்படுதலும் மரபு.

வீரர்கள் தம் அரசர்வேண்டியவற்றைத் தமக்குக் கொடுக்கவும் அவற்றைக்கொள்ளாமற் போரில் ஆசையுடையராகிக் சினத்தோடிருத்தலும்,செஞ்சோற்றுக் கடன் தீர்த்தற்பொருட்டு வீரர்தம் உயிரைப் போர்க் களத்திற் பலியாகக் கொடுத்துவீரசுவர்க்கத்தையடைதலும் இப்படலத்திற் சொல்லப்படும்.

பூமியிடத்துப் பற்றையொழித்துமெய்ம்மையான பொருளை விரும்புதலும், பூமியிலுள்ள துயரத்தைஎண்ணிப் பற்று நீங்குதலும் இத்திணையைச் சார்ந்தனவாகும்.

9. பாடாண்படலம்

அரசர்களுடைய புகழ், வலிமை, கொடை, கருணை முதலியவற்றைச் சிறப்பித்துச் சொல்லுதலும் பிறவும்இத்திணைக்குரியன. அவைவருமாறு:

அரசனது அரண்மனை வாயிலைக்கிட்டிய புலவர் முதலியோர் தம்முடைய நிலையைஅரசனுக்குத் தெரிவிக்கும்படி வாயில் காவலரிடம்கூறல், திரிமூர்த்திகளுள் அரசனால் தொழப்படும் தெய்வத்தைவாழ்த்தல், காயாம்பூவைத் திருமாலின் திருமேனிக்குஒப்பிடல், மும்மூர்த்திகளுள் ஒருவரை அரசனுக்கு உவமைகூறுதல், அரசன்பாற் பரிசில் பெறச் சென்ற புலவர்முதலியோர் அவனுக்கு முன், 'நாங்கள் பெற விரும்பியவைஇன்ன பரிசு' என்று கூறுதல், 'இன்னார்இன்ன பொருளைக் கொடுத்தனராதலின் நீயும் எமக்குக்கொடுக்கவேண்டும்' என்றல், அரசனுடைய தன்மையைச்சொல்லிப்புகழ்தல், அவன்துயிலுதலைச் சிறப்பித்தல், அவனைத் துயிலினின்றும்எழுப்புதல், துயிலெழுந்த அரசனுக்கு மங்கலம் இதுவெனக்கூறுதல், அவன் மங்கலப்பொருள்களை மேவினானெனச்சிறப்பித்தல், அவனுடையவிளக்கானது காற்றெறிந்த காலத்திலும் வலமாகச்சுழன்று சோதிவிட்டு விளங்குவதனால் அவனுக்குவெற்றியே உண்டாகுமென்று விளக்கின் நிலையைப்பாராட்டல், அவனைச் சூரியனோடு ஒப்பிடல், அவன்அந்தணர்களுக்குப் பசுவைத் தானம் செய்தல், தேவர்கள்மகிழ அவன் யாகம் செய்தல்,வெள்ளியாகிய மழைக்கோளின் நிலையை உணர்ந்துமழை உண்டாகுமென்று அவன்பால்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-09-2016 21:37:36(இந்திய நேரம்)