Primary tabs
அதனைப் பார்ப்பதிற்பயனில்லை என விட்டு, எனக்குக் கிடைத்த மேற்படி பிரதிகள் இரண்டனுள் கையெழுத்துப் பிரதியை உதவியாக வைத்துக்கொண்டு அச்சுப் பிரதியின்படி பதிப்பிக்க எண்ணி, என் மாணவர்களுள் ஒருவரும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரி உயர்கலாசாலை மாஜித் தலைமைத்தமிழாசிரியருமாகிய ஆ.வீ. கன்னைய நாயுடு அவர்களை அச்சுத்தாள்களை ஒப்பிட்டுப் பார்த்தல் முதலியவற்றிற்கு உதவி செய்பவராக ஏற்படுத்திக்கொண்டு பதிப்பிக்கத் தொடங்கினேன். அச்சுப் பிரதியில் இந்நூலின் முதற்படலமாகிய சந்திப்படலத்திலுள்ள புணர்ச்சி விதிகளுக்கு உதாரணங்கள் காணப்படாமையின், உதாரணங்களை எழுதி விதிகளுக்கு ஏற்ப எண்ணுக்குறியிட்டு அவ்வப்பக்கங்களிலேயே அடிக்குறிப்பாகச் சேர்த்தேன். அங்ஙனம் அவ்வுதாரணங்களை எழுதுதற்கு மேற்படி பிள்ளையவர்கள் உதவிய கையெழுத்துப் பிரதியே பெரிதும் துணை புரிந்தது. அவ்வுதாரணங்கள் பலவற்றின் பக்கத்தில் யான் 'வேறு பிரதி' எனக் குறித்தது, மேற்படி பிள்ளை அவர்களால் உதவப்பெற்ற பிரதியையேயாகும். மற்றைப் பகுதிகளிலுள்ள அருந்தொடர் முதலியவற்றிற்கு என்னால் எழுதப்பெற்ற சில குறிப்புகளும் அங்ஙனமே எண்ணுக்குறியிட்டு அவ்வப்பக்கங்களில் அடிக் குறிப்பாகச் சேர்க்கப்பட்டன. பழைய பதிப்பிற்கண்ட குறிப்புகள் உடுக்குறி முதலிய பிற குறிகள் இட்டுக் காட்டப்பட்டிருக்கின்றன.
மற்றைச் சொல், பொருள், யாப்பு என்னும் மூன்று அதிகாரங்களின் விஷயக் குறிப்புரையையும், அலங்காரத்தின் மேற்கோள் இலக்கியக் குறிப்புரையையும் எழுதி நூலின் முடிவிற் சேர்த்தேன்.
அவற்றுள், இரண்டாம் அதிகாரமாகிய சொல்லதிகாரம் பெரிதும் வடமொழியின் சம்பந்தமுடையதாதலின், சென்னைப் பச்சையப்பன் கல்லூரி உயர்கலாசாலை வடமொழிப் பண்டிதரும் என் அரிய நண்பருமாகிய
நா. வேங்கட சுப்பிரமணிய சாஸ்திரியார் அவர்கள்பால் மேற்படி அதிகாரத்திலுள்ள வடமொழியின் சம்பந்தமான விஷயங்களில் சிலவற்றைக் கேட்டேன். அவர் அவற்றை விளக்கிக்
கூறினர். ஆயினும், அதனால் அவ்விஷயங்கள்