தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Veerachozhium


நன்கு விளங்காமையின், மேற்படி சாஸ்திரியார் அவர்களின் உதவியினால் பிரயோக விவேகத்தைப் படித்து, அதன் துணையால் மேற்படி சொல்லதிகார விஷயக் குறிப்புரையை எழுதினேன். இங்ஙனம் மேற்படி சாஸ்திரியார் அவர்கள் புரிந்த அரிய உதவிக்காக அவர்களுக்கு என் அன்போடு கூடிய வந்தனத்தைச் செலுத்துகின்றேன்.

ஐந்தாமதிகாரமாகிய அலங்காரம் வித்துவான் பரீடக்ஷைக்குப் பாடமாக அமைக்கப் பெற்றிருத்தலின், அதன் மேற்கோட் செய்யுட்களுக்குக் குறிப்புரையாக மாத்திரமன்றிப் பல செய்யுட்கட்குப் பொழிப்புரையும் அவ்வவ்வணிகளின் விளக்கங்களும் எழுதினேன். இவ்வலங்காரத்தின்கண் காட்டப்பட்ட மேற்கோட்செய்யுட்களுட் பல, தண்டியலங்காரத்தினுஞ் சில பாட பேதங்களோடு காணப்படுகின்றன. அப்பாட பேதங்களையும் அவற்றிற்கு எழுதிய குறிப்புரை முதலியவற்றிற்கு முன்னே அவ்வச்செய்யுட்களின் கீழ்க் காட்டியிருக்கின்றேன். அங்ஙனம் இந்நூலின் அலங்காரத்து வரும் மேற்கோட் செய்யுட்களுக்குக் குறிப்புரை முதலியன எழுதுதற்கு மாறன் அலங்காரமும், ஸ்ரீ தி. ஈ. ஸ்ரீநிவாசராகவாசாரியார் அவர்கள் இயற்றிய தண்டியலங்கார சாரமும், ஸ்ரீ வை. மு. சடகோபராமாநுஜாசாரியார் அவர்கள் தாம் எழுதிய குறிப்புரையுடன் பதிப்பித்த தண்டியலங்கார மூலமும் உரையும், யாழ்ப்பாணம் திரு. அ. குமாரசுவாமிப் புலவர் அவர்கள் புதுக்கிப் பதிப்பித்த தண்டியலங்கார மூலமும் உரையும் பெரிதும் உதவி புரிந்தன. திரு. வீ. ஆறுமுகம் சேர்வை அவர்களால் பார்வையிடப்பட்டுச் சென்னை ரிப்பன் அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப் பெற்ற தண்டியலங்கார மூலமும் உரையும் சிற்சில இடங்களில் உதவி புரிவதாயிற்று.

மேற்படி ஆ. வீ. கன்னைய நாயுடு அவர்கள் இந்நூலின் இலக்கிய மேற்கோள் முதற்குறிப்பு அகராதியும், இலக்கண மேற்கோள் முதற்குறிப்பகராதியும் எழுதி உதவினார்கள். யான் இந்நூலின் அரும்பதங்கள், அருந்தொடர்கள் முதலியவற்றைத் தொகுத்து, அவற்றுள் உயிர் வருக்கத்திலுள்ளவற்றை அகராதியாக்கினேன். உயிர்மெய் வருக்கத்திலுள்ளனவற்றை மேற்படி நாயுடு அவர்களும், மேற்படி பவானந்தர் கழகத்தைச்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 04:20:57(இந்திய நேரம்)