தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Veerachozhium

சார்ந்த ஆலோசனைக் கழகத்தின் அங்கத்தினருள் ஒருவரும், பல நூற்களின் ஆசிரியரும், என் மாணவருள் ஒருவருமாகிய வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளையவர்களும், மற்றொரு மாணவராகிய ஜா. ப. ராஜசேகர நாயகரவர்களும் அகராதியாக்கி உதவினார்கள். முன்னிருவரும் இந்நூலை யான் பதிப்பிக்கையில் அச்சுப்பிரதிகளை ஒப்பு நோக்குதல் முதலியவற்றைச் செய்து பேருதவி புரிந்தனர். இவர்களுக்கு மேன்மேலும் ஆயுளும், செல்வமும், புகழும் பெருகும்படி அருளல் வேண்டும் எனத் திருமகள் நாதனை வேண்டுகின்றனன்.

மேற்படி ஆலோசனைக் கழகத்தின் மற்றை அங்கத்தினர்களாகிய கிறித்தவ கல்லூரி மாஜித் தமிழ்ப் பேராசிரியர் உயர்திரு. S. D. சற்குணர் B.A., அவர்களும், பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் உயர்திரு. கந்தசாமி முதலியார், B.A., M.R.A.S., (London) அவர்களும், வித்துவான் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, M.A., B.L., M.O.L., அவர்களும் இந்நூலைப் பதிப்பித்தற்கான பல நன்முறைகளைக் கூறிப் பேருதவி புரிந்தார்கள். கைம்மாறு வேண்டாது இப்பேருதவி புரிந்த இவர்களுக்கு எனது நன்றியதலுடன் கூடிய வந்தனத்தையன்றி யான் செய்தற்கு யாதுளது!

பவானந்தர் கழகத்தின் தரும பரிபாலகர்களாகிய உயர்திருவாளர்கள் T. G. தாமோதர முதலியார் அவர்களும், T. S. சண்முகசுந்தரம் பிள்ளையவர்களும், J. கண்ணப்ப முதலியார் அவர்களும், M. பாலசுப்பிரமணிய முதலியார், M.A., அவர்களும், V. மோகனவேங்கடராம செட்டியார் அவர்களும், A. வரதப்ப செட்டியார் அவர்களும், P. K. விநாயக முதலியார் அவர்களும் என்னை நன்கு உபசரித்து, இந்நூலைப் பதிப்பிக்க வேண்டிய உதவிகளைப் புரிந்து மேன்மைப்படுத்தினார்கள். இப்பெருந்தகையாளர்களுக்கு என் அன்போடு கூடிய வந்தனம் என்றும் உரியதாகுக !

கா. ர. கோ.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 04:21:05(இந்திய நேரம்)