தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பதிப்புரை

ஸ்ரீ :

பதிப்புரை

செய்யுட்கின்றியமையாத குணாலங்காரங்களையும் சொற்பொரு ளணிகளையும் விரித் தினிதியாக்கப்பெற்றதும், இற்றைக்குப் பதினான்கு வருடங்கட்குமுன் செந்தமிழ்ப்பிரசுரமாக முதன்முறை வெளியிடப்பட்டதுமான மாறனலங்காரம், முதற்பதிப்புப்பிரதிகள் முழுதும் செலவாய்விட்டமையாலும், மதுரைத்தமிழ்ச்சங்கத்தாரால் பண்டிதபரீக்ஷைக்கும் சென்னைச் சருவகலாசங்கத்தாரால் வித்வான்பரீக்ஷைக்கும் பாடமாக வைக்கப்பட்டிருத்தலாலும் இடையிடையே சிற்சில திருத்தங்களுடன் இதுபொழுது இரண்டாமுறை பதிக்கப்பட்டிருக்கிறது. இந்நூலின் பெருமை நூலாசிரியர் வரலாறு முதலிய பலவும் அடுத்துச் சேர்க்கப்பட்டிருக்கும் இதன் முதற்பதிப்பின் முகவுரை முதலியவற்றால் விளங்கும். இதன் முதற்பதிப்புக்குதவியாயிருந்த செந்தமிழுதவிப் பத்திராதிபர் திரு. கி. இராமாநுஜையங்கார் இப்பதிப்புக்கும் புரூப் முதலிய பார்த்துத் திருத்தங்கள் செய்தற்கு மிகவும் உதவிபுரிந்தமை பாராட்டற்பாலது.

 
இங்ஙனம்
திரு. நாராயணையங்கார்
செந்தமிழ்ப்பத்திராதிபர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 07-08-2017 20:21:39(இந்திய நேரம்)