தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தும்பி சேர்கீரனார்


தும்பி சேர்கீரனார்

277. பாலை
கொடியை; வாழி-தும்பி!- இந் நோய்
படுகதில் அம்ம, யான் நினக்கு உரைத்தென;
மெய்யே கருமை அன்றியும், செவ்வன்
அறிவும் கரிதோ-அறனிலோய்!-நினக்கே?
5
மனை உறக் காக்கும் மாண் பெருங் கிடக்கை
நுண் முள் வேலித் தாதொடு பொதுளிய
தாறு படு பீரம் ஊதி, வேறுபட
நாற்றம் இன்மையின், பசலை ஊதாய்:
சிறு குறும் பறவைக்கு ஓடி, விரைவுடன்
10
நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ? அன்பு இலர்,
வெம் மலை அருஞ் சுரம் இறந்தோர்க்கு
என் நிலை உரையாய், சென்று, அவண் வரவே.
பட்ட பின்றை வரையாது, கிழவோன் நெட்டிடைக் கழிந்து பொருள்வயிற் பிரிய,ஆற்றளாகிய தலைமகள் தும்பிக்குச் சொல்லியது.-தும்பி சேர் கீரனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:24:13(இந்திய நேரம்)