தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அமர்க் கண் ஆமான்


அமர்க் கண் ஆமான்

165. குறிஞ்சி
அமர்க் கண் ஆமான் அரு நிறம் முள்காது
பணைத்த பகழிப் போக்கு நினைந்து, கானவன்,
'அணங்கொடு நின்றது மலை, வான் கொள்க' எனக்
கடவுள் ஓங்கு வரை பேண்மார், வேட்டு எழுந்து,
5
கிளையொடு மகிழும் குன்ற நாடன்
அடைதரும்தோறும், அருமை தனக்கு உரைப்ப,
'நப் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு
அன்ன ஆகுக' என்னான்;
ஒல்காது ஒழி; மிகப் பல்கின தூதே.
நொதுமலர் வரையும் பருவத்து, தோழி தலைவிக்கு அறத்தொடு நிலை பயப்பச் சொல்லியது; வரைவு மலிந்ததூஉம் ஆம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:42:52(இந்திய நேரம்)