தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இறவுப் புறத்து அன்ன


இறவுப் புறத்து அன்ன

19. நெய்தல்
இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல்
சுறவுக் கோட்டன்ன முள் இலைத் தாழை,
பெருங் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு,
நல் மான் உழையின் வேறுபடத் தோன்றி,
5
விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப!
இன மணி நெடுந் தேர் பாகன் இயக்க,
செலீஇய சேறிஆயின், இவளே
வருவை ஆகிய சில் நாள்
வாழாளாதல் நற்கு அறிந்தனை சென்மே!
புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது.-நக்கண்ணையார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:48:23(இந்திய நேரம்)