தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உரவுத் திரை


உரவுத் திரை

235. நெய்தல்
உரவுத் திரை பொருத பிணர் படு தடவு முதல்,
அரவு வாள் வாய முள் இலைத் தாழை
பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும்
பல் பூங் கானல் பகற்குறி வந்து, நம்
5
மெய் கவின் சிதையப் பெயர்ந்தனனாயினும்,
குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி,
கண்டனம் வருகம் சென்மோ-தோழி!-
தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத,
படு மணிக் கலி மாக் கடைஇ,
10
நெடு நீர்ச் சேர்ப்பன் வரூஉம் ஆறே.
வரைவு நீட ஆற்றாளாங் காலத்துத் தோழி வரைவு மலிந்தது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:49:19(இந்திய நேரம்)