தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உரு கெழு தெய்வமும்


உரு கெழு தெய்வமும்

398. நெய்தல்
உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே;
விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே;
நீர் அலைக் கலைஇய கூழை வடியாச்
சாஅய் அவ் வயிறு அலைப்ப, உடன் இயைந்து,
5
ஓரை மகளிரும், ஊர் எய்தினரே;
பல் மலர் நறும் பொழில் பழிச்சி, யாம் 'முன்,
சென்மோ, 'சேயிழை?' என்றனம்; அதன் எதிர்
சொல்லாள் மெல்லியல், சிலவே-நல் அகத்து
யாணர் இள முலை நனைய,
10
மாண் எழில் மலர்க் கண் தெண் பனி கொளவே.
முன்னுற உணர்ந்து பகற்குறி வந்து மீளும் தலைமகனை, 'நீ தான் இவளது தன்மையை ஆற்றுவி' எனச் சொல்லியது.- உலோச்சனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:49:25(இந்திய நேரம்)