தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வளைநீர் மேய்ந்து


வளைநீர் மேய்ந்து

54. நெய்தல்
வளை நீர் மேய்ந்து, கிளை முதல்செலீஇ,
வாப் பறை விரும்பினைஆயினும், தூச் சிறை
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து-
கருங் கால் வெண் குருகு!-எனவ கேண்மதி:
5
பெரும் புலம்பின்றே, சிறு புன் மாலை;
அது நீ அறியின், அன்புமார் உடையை;
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது, என் குறை
இற்றாங்கு உணர உரைமதி-தழையோர்
கொய்குழை அரும்பிய குமரி ஞாழல்
10
தெண் திரை மணிப் புறம் தைவரும்
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே!
காமம் மிக்க கழிபடர்கிளவி.-சேந்தங் கண்ணனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:53:55(இந்திய நேரம்)