தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கொண்டல் ஆற்றி


கொண்டல் ஆற்றி

89. முல்லை
கொண்டல் ஆற்றி விண்தலைச்செறீஇயர்,
திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி,
நிரைத்து நிறை கொண்ட கமஞ் சூல் மா மழை
அழி துளி கழிப்பிய வழி பெயற் கடை நாள்,
5
இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின்
அகல் இலை அகல வீசி, அகலாது
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை,
பரும யானை அயா உயிர்த்தாஅங்கு,
இன்னும் வருமே-தோழி!-வாரா
10
வன்கணாளரோடு இயைந்த
புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்தே!
'பொருள் முற்றி மறுத்தந்தான்' எனக் கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது.-இளம் புல்லூர்க் காவிதி

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:01:46(இந்திய நேரம்)